June 19, 2021

மாதவரம் தெற்கு பகுதி புத்தகரத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது…

1 min read

மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் கொரோனா தோற்று பரிசோதனை முகாம், மற்றும் தடுப்பூசி முகாம் நடத்திட வேண்டி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து, மாதவரத்திற்க்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கொரோனா தொற்று பரிசோதனை முகாம்கள், தடுப்பூசி போடும் முகாம்கள் என அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, மாதவரம் தெற்க்கு பகுதி புத்தகரத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. புத்தகரம் தொடக்க பள்ளியில் நடைபெற்ற அந்த முகாம், மாநகராட்சி ஆணையர் முருகன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இம்முகாமை பார்வையிட்ட மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் அவர்கள் முகாமிற்க்கு வந்திருந்த பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கி, கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் அறிவுரைகளையும் எடுத்து கூறினார். இம்முகாமில், புத்தகரம் பகுதியிலுள்ள 45 வயதிற்கு மேற்பட்டு, ஆதார் கார்டு கொண்டு வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இம்முகாமை, திமுக 24 வது வட்ட செயலாளர் ஏழுமலை, வட்ட துணை செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். கௌதம்பாலாஜி, டி எம் கே ஜோதி, முருகன், சேகர், ஸ்ரீதர், முரளி கிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – டி.எம்.கே.ஜோதி
நிழல் . இன் – 8839476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed