September 24, 2021

சேலம் தாதகாப்பட்டி குலாலர் மண்டபத்தில், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில், 5,000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்…

1 min read
Spread the love

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் உயிர் சேதம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காகமத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நோய் பரவல் அதிகரித்ததன் விளைவாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதே போல் சேலம் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
அரசு சார்பில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் இந்த இரண்டாவது அலையில், வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிர் சேதம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே கொரோனாவை கட்டுப்படுத்தி உயிர் சேதத்தை தடுப்பதற்காக, பல்வேறு தளர்வுகளுடன் அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்நிலையில், நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில், சேலம் தாதகாப்பட்டி குலாலர் மண்டபம் முன்பு சுமார் 5000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில ஆட்சி மன்றக்குழு நிர்வாகி கோல்டு தேவா (எ) தேவராஜ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி ஓடெக்ஸ். இளங்கோவன், தாதகாப்பட்டி பகுதி திமுக செயலாளர் ஏ.எஸ்.சரவணன், வி.எச்.பி.மாநகர செயலாளர் அங்குராஜ், ஸ்ரீராகவேந்திரா ரஜினிகாந்த் ரசிகர்மன்ற நிர்வாகி குகை அய்யப்பன், காளி.தங்கதுரை, ஜெயம் முருகன், மாசிலாமணி, இம்ரான், உமாசங்கர், பாலு, மணிகண்டன், உடையாப்பட்டி பிரகாஷ், அஷ்ரப் ஆகியோர் சமுக இடைவெளியை கடைபிடித்து நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள். இந்த முகாமில், நேரடியாக 2,500 பேருக்கும், பார்சலில் 2,500 பேருக்கும் என மொத்தமாக சுமார் 5,000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் ஒலிபெருக்கி வாயிலாக கொரோனா நோய் பரவலின் அறிகுறிகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

செய்தியாளர் – தங்கராஜ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed