June 21, 2021

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், நேற்று நள்ளிரவு போதிய ஆக்சிஜன் இல்லாததால், 7 பேர் உயிர் இழப்பு…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று 1,551 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், இது வரை 79 ஆயிரத்து 022 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

நேற்று ஒரே நாளில் 1,752 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால் இது வரை 70 ஆயிரத்து 292 நபர்கள் குணமடைந்ததாகவும், இன்று 22 நபர்கள் உயிரிழந்ததால், இது வரை 1,000 நபர்கள் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படு உள்ளவர்கள் என 7,730 பேர் இருப்பதாகவும் சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு போதிய ஆக்சிஜன் இல்லாததால், 7 பேர் வரை உயரிழந்ததாகவும், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் ஒரு பெண் பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது. தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாததால், டேபிள் பேன் வைத்திருக்கும் வீடியோவும் வைரலாகிறது.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed