June 19, 2021

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், முழு ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் “டிரோன் கேமரா” மூலம் கண்காணிப்பு…

1 min read

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று திருச்செந்தூர் கோவில் மற்றும் கடற்கரைப் பகுதிகள் மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் உள்ள ஆர்ச் பகுதியில் “டிரோன் கேமரா” மூலம் பொதுமக்களின் நடமாட்டம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்துகள் குறித்து பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த 10.05.2021 முதல் 24.05.2021 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.

அதன்படி நேற்றில் இருந்து மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோன வைரஸ் பரவலை தடுப்பதற்கு மிக முக்கியமானதான முகக்கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, இதுவரை சுமார் 40,000 வழக்குகள் போட்டு 80 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளோம். இது தவிர சமூக இடைவெளி மற்றும் கடைகள் திறந்த வைப்பதென சுமார் 400 வழக்குகள் போடப்பட்டுள்ளது. எங்களுக்கு வழக்குகள் முக்கியமில்லை, முகக்கவசம் அணிய வைத்தும், சமூக இடைவெளி கடைபிடிக்க வைத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதும் தான் எங்களுடைய முக்கிய நோக்கமாகும்.

இப்போது பொதுமக்களும் புரிந்து கொண்டு முகக் கவசம் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். பொதுமக்கள் மூக்கை முழுமையாக மூடிய வண்ணம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் மற்றும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மற்றும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், திருச்செந்தூர் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed