October 24, 2021

பொன்னேரி அருகே, இளைஞர்கள் ஏழை குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்…

1 min read
Spread the love

வஞ்சிவாக்கம்,பகுதியில் இயங்கி வரும் கற்கை நன்று கிராமக்கல்வி அறக்கட்டளை சார்பில், “கொரோனா” தொற்று நோய் காரணமாக ஊரடங்கில் முடங்கிய வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் ” 15 ஏழை குடும்பங்களுக்கு பசியை போக்குவோம் என்பதற்கு இணங்க, அவர்களின் அத்தியாவசிய தேவைக்கேற்ப 5 கிலோ அரிசி மற்றும், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. “இப்போ நான் என்ன செய்ய” குழு நண்பர்களுக்கும் இந் நிகழ்விற்க்கு உறுதுணையாக இருந்தனர். குழுவினர்களுக்கு அப்பாவி மக்கள் மற்றும் இளைஞர்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

அதேபோல், கற்கை நன்றே அறக்கட்டளையின் குழுவினர் இளைஞர்கள் மெத்தூரில் இயங்கி வரக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். கற்கை நன்றே அறக்கட்டளையின் சார்பில், நவீன் மற்றும் மெதூர் சேகர் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed