October 24, 2021

ராஜபாளையத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 150 நோயாளிகள் மற்றும் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் 150 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள், கடந்த வருடம் வழங்கியது போல் தற்போதும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோக்கில் பாதாம், முந்திரி, கடலை பருப்பு மற்றும் பழ வகைகள் என 13 பொருட்கள் அடங்கிய (கிப்ட் பேக்) உணவு பொருட்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் இன்று வழங்கினார்.

இதே போல் இனி தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தகுந்தவாறு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், நோயாளிகள் அச்சமின்றி மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் தங்கபாண்டியன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.

மேலும், கொரொனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் துணையாக
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் நமது மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் அவர்களும் தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தனுஷ் எம்.குமார் எம்.பி அவர்களும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராகிய நானும் உறுதுணையாக இருந்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தர தயாராக உள்ளோம் எனக் கூறினார். இந்நிகழ்வில் இராஜபாளையம் நகர பொறுப்பார்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, மருத்துவர் கருணாகரபிரபு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் ஒன்றிய துனை சேர்மன் துரைகற்பகராஜ், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் சரவனன் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed