October 24, 2021

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற, கொரோனா தடுப்பூசி முகாமை பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார்…

1 min read
Spread the love

மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு ஊராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம் இணைந்து நடத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி அம்மாள் செய்து இருந்தார்.

முகமை மேற்பார்வையிட்ட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் வேதநாயகம், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகியோர் அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலமாக, கொரோனா பரவல் குறித்த கணக்கீடு செய்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினர்.

இம் முகாமை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும், அனுப்பம்பட்டு ஊராட்சியில் கொரோனா பரவல் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர். அப்போது, மாவட்ட கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் பொன்னேரி ஆர்.டி.ஓ செல்வம், தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர் ராஜேஷ், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

மேலும், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் தமிழன் இளங்கோவன், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மணி, கணியம்பாக்கம் தன்சிங், அனுப்பம்பட்டு தி.மு.க ஊராட்சி செயலாளர் இ.மணி, கிராம ஊராட்சி செயலாளர்கள் இளஞ்சூரியன், செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed