October 24, 2021

இராஜபாளையத்தில், மாம்பழ விவசாயிகள், வியாபாரிகளின் கோரிக்கைையை, நிறைவேற்றி வைத்த, தங்கபாண்டியன் எம்.எல்.ஏ…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில், மாம்பழ விவசாயிகளும், வியாபாரிகளும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளை சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து, மாம்பழ வியாபாரம் செய்ய இயலாமலும், விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததாலும் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, மாம்பழ வியாபாரத்திற்கு அனுமதி வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். உடனடியாக, எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை எடுத்துரைத்து புதிய பேருந்து நிலையத்தில் மாம்பழ வியாபாரத்திற்கு அனுமதி பெற்று கொடுத்தார். அதனை தொடர்ந்து இன்று புதிய பேருந்து நிலையத்தில் மாம்பழ ஏல விற்பனையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் பேசிய எம்எல்ஏ தங்கபாண்டியன் அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படாதவாறு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும், நேற்று மாங்காய் கிலோ 10 ரூபாய்க்கு விலை போனது, ஆனால் இன்று 60 ரூபாய் வரை விலைக்கு போனது என்பது குறிப்பிடத்தக்கது, என கூறினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்று வியாபாரிகள் வியாபார செய்ய அடையாள அட்டையுடன் கூடிய அனுமதி வழங்கப்படும் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் (வேளாண்மை) சங்கர் எஸ்.நாராயணன் தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை துணை இயக்குனர் சரஸ்வதி, விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, விவசாய சங்க தலைவர் ராமச்சந்திரராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இக்சாஸ் குணா மற்றும் கழக நிர்வாகிகள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed