June 19, 2021

கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தேவை என்று வாட்ஸ்-அப் தகவலை பார்த்த, திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் அரை மணி நேரத்தில் ரத்தம் ஏற்பாடு செய்து உதவினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (26) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஆனந்தி (21) நிறைமாத கர்ப்பிணியான ஆனந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக, அந்தப் பெண்ணை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கு ஆனந்தியை பரிசோதனை செய்த டாக்டர் இரண்டு நாட்களுக்குள் பிரசவ ஆகும். ஆனால், அந்தப் பெண்மணிக்கு ரத்தம் தேவைப்படுகிறது, என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் மருத்துவமனையில் இரத்தம் இல்லாததால் பதற்றமடைந்த கணபதி தனது மனைவிக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்று வாட்ஸ்அப் குரூப்புக்கு தகவல் அனுப்பினார்.

அதைப் பார்த்ததும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் உடனடியாக கணபதியிடம் தொடர்பு கொண்டு உங்கள் மனைவிக்கு தேவையான ரத்ததை நான் ஏற்பாடு செய்கிறேன், தைரியமாக இருங்கள். என்று கூறியதுடன் தனது உதவியாளர் மூலம் அரை மணி நேரத்தில் ஏற்பாடு செய்யபட்டு, ஆனந்திக்கு தேவையான ரத்தம் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உடனடியாக, கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. சரியான நேரத்தில் ரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்த திமுக எம்.எல்.ஏக்கு கணபதி அவரது குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து பாராட்டினார்கள்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed