June 17, 2021

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும், திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு, நீராவி பிடிக்கும் உபகரணங்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்…

1 min read

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.

மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களை மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி போன்றவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அதனை தொடர்ந்து, நீராவி பிடிப்பதனால் சுவாசப் பிரச்சனை சீராகி உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைவரும் பயன்பெறும் வகையில் நீராவி பிடிப்பதற்கு என வடிவமைக்கப்பட்டுள்ள குக்கர் மற்றும் இன்டெக்சன் ஸ்டவ், மற்றும் நீராவி பொடி ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில், அனைத்து உட்கோட்ட அலுவலகங்களுக்கும்,காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும், மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க, அறிவுறுத்தும் வகையில் சாலைகளில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *