June 19, 2021

திருவண்ணாமலை போர்ட் நிறுவனம் சார்பாக, மருத்துவர்களுக்கும், காவலர்களுக்கும் உயர்தரமான ஃபேஸ் மாஸ்க்கள் வழங்கப்பட்டது…

1 min read

பிரபல போர்டு கார் நிறுவனம் சார்பில் திருவண்ணாமலையில் முன் களப்பணியாளர்கள் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஃபோர்டு நிறுவனம் சார்பாக, தமிழகம் முழுவதும் முதல்தர மாஸ்க்குகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் இன்று N95 மாஸ்க் 4000, குழந்தைகள் அணியும்
3 லேயர் மாஸ்க் 8000, பெரியவர்கள் அணியும்
3 லேயர் மாஸ்க் 30,000 மொத்தம் 42,000 எண்ணிக்கைகள் கொண்ட மாஸ்குகளை சரிபாதியாக பிரித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் சார்பாக சாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது .

இன்று, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களிடம் காவல்துறையினர்களுக்கும் முக கவசங்களை ஃபோர்டு நிறுவனத்தின் சார்பாக சாமிநாதன் வழங்கினார் . கொரோனா தொற்றில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தன்னலமற்று பணி செய்து வரும் காவலர்களுக்கு முக கவசங்களை அளித்தார். இந்த நிகழ்வில் டிஎஸ்பி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் .

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் முகக் கவசங்களை போர்டு நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வர் K.திருமால் பாபு மாஸ்குகளை வழங்கிய போது மருத்துவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் இருந்தனர். இதேபோல் போர்டு நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கும்” மருத்துவமனைகளுக்கும் முதல்தர மாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed