October 24, 2021

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில், கஞ்சா, மதுபானம் விற்பனை செய்த 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு…

1 min read
Spread the love

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கம், சாமுவேல், செந்தில் குமார், மகாலிங்கம், முத்துப்பாண்டி மற்றும் திருமணி ராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து மேற்கொண்ட போது முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் உப்பாத்து ஓடைப்பாலம் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வைத்திருந்த தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவைச் சேர்ந்த ஹரிகரன் (21) என்பரைக் கைது செய்து, அவரிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்படி தனிப்படையினர் மேலசண்முகபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கு கணேசன் (36) மற்றும் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த ஜெயகண்ணன் (40) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. ஆகவே மேற்படி தனிப்படையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை செய்த மேற்படி 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மேற்படி தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed