June 17, 2021

தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்…

1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த செல்வசேகர் சகோதரிக்கு தகுதிக்கேற்ற வேலையை  இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் பி.கீதாஜீவன், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி கூறுகையில் ;
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை இடைக்கால அறிக்கை கடந்த 16ஆம் தேதி முதல்வரிடம் கிடைத்ததை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் 5 நாட்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மேற்படிப்பை மேற்கொள்ளவும், பாஸ்போர்ட் பெறுவது, வேலைவாய்ப்பை பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட இருந்த தடை விலகி உள்ளதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தற்போது அரசு இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்பு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத,மக்களை பாதிக்காத தொழிற்சாலைகள் நிச்சயம் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார். அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க படாது என்ற உறுதியும் அவர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே. செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *