October 24, 2021

ராஜபாளையத்தில், தளர்வற்ற முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த, அமைச்சர் தலைமையில், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்…

1 min read
Spread the love

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், தமிழகஅரசு தளர்வுடன் கூடிய ஊரடங்கை அறிவித்திருந்தது. இருந்தாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதினால், நாளையில் இருந்து ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், அந்த ஊரடங்கை ராஜபாளையத்தில் நடைமுறைப்படுத்த வேண்டி, நேற்று மாலை இராஜபாளையம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் கொரனோ தடுப்பு நடவடிக்கை ஆய்வுகூட்டம் நடைபெற்றது.

இதில், எம்.பி தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ எஸ்.தங்கப்பாண்டின் சிங்கராஜ் சேர்மன் மருத்துவ அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed