June 21, 2021

கும்மிடிப்பூண்டியில், நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை வாகன பயன்பாட்டை, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…

1 min read

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, கும்மிடிப்பூண்டி வேளாண் துறை, புதும்மிடிப்பூண்டி ஊராட்சி, கீழ்முதலம்பேடு ஊராட்சி சார்பில் 25 நடமாடும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வகையில் அவைகளை மக்களின் பன்பாட்டிற்காக, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு கரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தளர்வில்லா ஊரடங்கை இன்று முதல் அமுல்படுத்தியது. இந்நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறி பழங்களை பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நடமாடும் காய்கறி கடைகளை ஏற்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை ஒட்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவி, சுகாதார மேற்பார்வையாளர் கோபி முன்னிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் 14லோடு ஆட்டோக்கள், 4 தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து இதன் துவக்க விழாவிற்கு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நடமாடும் இந்த காய்கறி வாகனங்களை கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், நகர செயலாளர் அறிவழகன், திமுக நிர்வாகிகள் பாஸ்கரன்,திருமலை பங்கேற்றனர்.

அவ்வாறே, கும்மிடிப்பூண்டி வேளாண் துறை சார்பில் நரசிங்கபுரம், அப்பாவரம், எளாவூர் ஆகிய உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு இபாஸ் ஏற்பாடு செய்து தரப்பட்டு, காய்கறி பழ வாகனம் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் தலைமையிலும், துணை வேளாண் அலுவலர் ரமேஷ், உதவி வேளாண் அலுவலர்கள் அருள்முருகன், ஆனந்தராஜ், சுகுணா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் 3 காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

நிகழ்வில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், நடராஜன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன், ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, அமலா சரவணன், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், வி.எம்.எஸ்.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், பங்கேற்ற எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் 3 நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை மக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, துப்புரவு பணியாளர்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள், இலவச காய்கறி தொகுப்பை வழங்கி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.

நிகழ்வில், ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், திமுக நிர்வாகிகள் மணிகண்டன், பாண்டியன்,கார்த்தி, உதயா, எட்டியப்பன், லோகேஷ், ராமு, சதீஷ் பங்கேற்றனர். மேலும் கீழ்முதலம்பேடு ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை, ஊராட்சி செயலாளர் சாமுவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று காய்கறி பழ விற்பனை வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed