October 24, 2021

சென்னை மாதவரத்தில், தனியார் மருத்துவ மனையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்…

1 min read
Spread the love

கொரோனா 2-வது அலையில் அவதியுறும் நோயாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவ மனைகள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவ மனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில், 100 படுக்கை வசதிகளுடன் கொண்ட சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். அப்போது, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், இந்து அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியம், 70 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை போடபட்டுள்ளது எனவும், சரியான நேரத்தில் போடபடாத 13% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன எனவும் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் போட உள்ளதாகவும் இந்தத் தடுப்பூசிகள் ஆட்டோ ஓட்டுனர்கள், முன் களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு முதலில் போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் , கூறினார்.

மூன்றரை கோடி தடுப்பூசிகள் உலகளாவிய கொள்முதல் செய்ய உள்ளதாகவும், தடுப்பூசிகள் கொள்முதல் செய்தவுடன் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என கூறினார். மேலும், “கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவ மனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.” என அமைச்சர் மா சுப்பிரமணியம் கூறினார். மேலும் 890 தனியார் கண் மருத்துவமனைகளில், இலவச கண் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், தமிழக முதல்வர் அரசாணையில் வெளியிட்டுள்ளதாக கூறினார்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed