June 21, 2021

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், வீடு தேடி காய்கறி தொகுப்பு பைகள், பழங்கள், விற்பனை வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார்…

1 min read

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் சென்று சேர நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.

அதன்படி, 44 வாகனங்கள் மற்றும் ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் சென்று சேர 94 வாகனங்கள் திருநின்றவூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் அத்தியவசிய பொருட்கள் சென்று சேர 11 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விற்பனை வாகனத்தினை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக, பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற முன்களப்பாணியாளர்களுகான பயிற்சி மற்றும் ஆலேசானைக் கூட்டத்தில், செவிலியர்கள் அனைவரும் முழு உடற்கவசத்துடன் முழு நேரமும் பணியில் ஈடுபட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

எனவே, அவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குறியதாகும். முன்களப்பணியாளர்கள் வீடுதோறும் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளும் பொழுது உரிய வழிமுறைகளை பின்பற்றி களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், முககவசம் அணிந்து, கிருமி நாசனி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டும், சுகாதார முனைப்போடு செயல்பட வேண்டும். என தெரிவித்தார்.

மேலும், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; திருவள்ளுர் மாவட்டத்தில் மொத்தம் 1018 நடமாடும் வாகனங்கள் காய்கறி தொகுப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்றவாறு இன்னும் நடமாடும் வாகனங்கள் அதிகப்படுத்தி பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பால் விநியோகம் தங்கு தடையின்றி கிடைப்பதற்காக அனைத்து பால் உற்பத்தி நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாம்பரம் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் உள்ள ஆவின் பால் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யும் சில்லரை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பால் விநியோகம் எங்கு தடைப்படுகிறதோ அங்கு அவர்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க தனித்தனியாக குழுக்கள் அமைத்து கட்டுப்பாட்டு அறை அமைத்து, பால் விநியோகம் சரியான முறையில் வீடு தேடி சென்றடைய முன்னுரிமை அளித்து அதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, ஆவடி மாநகராட்சி பகுதி பொறுப்பாளர் ஆவடி ஜி.ராஜேந்திரன், பொன்.விஜயன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, பேருர் செயலாளர் தி.வை.ரவி, சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், பிரபு கஜேந்திரன், ஏ.ஜெ.பவுல், எஸ்.மூர்த்தி, ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி, வேளாண்மை துணை இயக்குனர் பாண்டியன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை எபினேசர் , நகராட்சி பொறியாளர்கள் நளினி, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், ஜாபர், உள்பட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed