June 19, 2021

பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், 18 வார்டுகளிலும் தொடர்ந்து மூன்று நாட்களாக, முக கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன…

1 min read

அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு, பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், நகர தலைவர், வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட நிர்வாகி கோவர்தனம் உள்ளிட்டோர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் ஆலோசனையின் படி, பொன்னேரி பஜார் வீதி மற்றும் அனைத்து வார்டு பகுதிகளிலும், தொடர்ந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டு, கொரோனா குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந் நிகழ்வில், மாநில துணைத் தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு முககவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி விழிப்புணர்வு கருத்துகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed