June 19, 2021

ராஜபாளையத்தில், கொரோனா தோற்று நோயாளிகளுக்கு கூடுதலான, படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை, எம்.எல்.ஏ தங்கபாண்டியன் ஆய்வு செய்தார்…

1 min read

முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSRR அவர்களின் வழிகாட்டுதல்படியும், இராஜபாளையம் அரசு மருத்துவமணையில் கொரணோ நோயாளிகளுக்கு 100 படுக்கை வசதி இருப்பதை, கூடுதலாக 200 நோயாளிகள் பயன்படுத்த படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.

ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது இருந்த 250 நோயாளிகள் இருப்பதை 400 நபர்கள் தங்கும் வகையில் உயர்த்தியும் புதியதாக ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியிலும் 300 நபர்களுக்கு படுக்கை வசதிகள் அமைத்ததையும், எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் மற்றும் தலைமை மருத்துவர், மாவட்ட கொரனோ தடுப்பு தலைமை அதிகாரி கல்யாணக்குமார், இராஜபாளையம் தாசில்தார், காவல் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆய்வு செய்தார்கள்.

அப்போது இராஜபாளையத்தில் எந்த நோரத்திலும் கொரனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்கு, முதல்வர் அவர்களும், மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் , எம்.பி, எம்.எல்.ஏ, அனைவரும் உறுதுனையாக இருப்போம் என எம்எல்ஏ கூறினார். இவர்களுடன் ராஜபாளையம் திமுக நகர பொருப்பாளர் ராமமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed