June 21, 2021

கும்மிடிப்பூண்டியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு கரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்…

1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கரோனா தொற்று பரவலை ஒழிக்க ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
கும்மிடிப்பூண்டியில், கரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோருடன் தனித்தனியாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், நடராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பேசிய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் கும்மிடிப்பூண்டியில் கரோனா முதல் அலையில் 22 பேர்கள் பலியான நிலையில் இரண்டாவது அலையில் பேர் பலியாகி உள்ளனர், முதல் அலையின் போது சராசரியாக 20-40பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலையில் 70-115பேர் தினமும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் பொதுமக்கள் பொது இடங்களில் அலட்சியமாக முககவசம் அணியாமல் இருப்பதும், துக்க நிகழ்வுகளில் நிறைய பேர் கூடுவதுமே என்றார்.

மேலும் கும்மிடிப்பூண்டியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பலர் காய்ச்சல் இருமல் வந்ததும் கரோனா சோதனை மேற்கொள்ளாமல்
மருந்துகடைகளில் மாத்திரை வாங்கியோ, உள்ளூர் மருத்துவர்களிடம் வைத்தியம் பார்த்தோ நாட்களை வீணாக்குகின்றனர். இந்த கால இடைவெளியில் அவர்கள் பலருக்கு கரோனா தொற்றை பரப்புவதுடன், பின் மூச்சுதிணறல் வந்த பிறகே அரசு மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால் காய்ச்சல் இருமல் 2நாட்கள் தொடர்ந்தால் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களிடம் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக முதல்வர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு கட்டமான ஊரடங்கினை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என அந்தந்த ஊராட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்குவதோடு, கரோனா தொற்று குறித்த அச்சத்தை போக்கும் வகையில்ல ஆரம்பத்திலேயே கரோனா பரிசோதனை செய்வதன் மூலம் கரோனாவை எளிதாக வெல்லலாம் என மக்களுக்கு அந்தந்த ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் எடுத்துரைக்க வேண்டும், கிராமங்களில் கரோனா தடுப்பூசி பற்றி அச்சத்தை போக்கி அனைவரையும் தடுப்பூசி போட செய்ய வேண்டும் என்றார்.

மேலும் பேசியவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கும்மிடிப்பூண்டியில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் 50 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் கும்மிடிப்பூண்டி ஏழுகிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதையும், கும்மிடிப்பூண்டியில் கரோனா தொற்று பாதித்தவருக்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. என்றவர், கிராமங்களில் கரோனா பரிசோதனகள், தடுப்பூசி போடுவதை ஊராட்சி தலைவர்கள் அதிகப்படுத்த நடடிக்கை எடுக்க வேண்டும் என்றவர், மக்களுக்கு அத்தியாவசிய தேவை குறைபாடு ஏற்படாத வகையில் அந்தந்த பகுதியில் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் எகுமதுரை ஸ்ரீபிரியா மகேந்திரன், சுண்ணாம்புகுளம் எஸ்.எம்.ரவி, கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மாதர்பாக்கம் சீனிவாசன், மாநெல்லூர் லாரன்ஸ், சாணபுத்தூர் அம்பிகா பிர்லா, புதுவாயல் அற்புதராணி சதீஷ்குமார், கண்ணன்கோட்டை கோவிந்தசாமி, அயநெல்லூர் லலிதா கல்விசெல்வம், ஏனாதிமேல்பாக்கம் பிரபு,பாதிரிவேடு மூர்த்தி உள்ளிட்ட 61 ஊராட்சி தலைவர்கள் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜெயச்சந்திரன், கலா உமாபதி, ஜோதி, அமலா சரவணன், கௌரி ஹரிதாஸ் அதிமுக கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ்குமார், ஆரோக்கியமேரி, ஏ.டி.நாகராஜ், தேவி சங்கர்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரவிக்குமார், பாமக கவுன்சிலர் சங்கர், காங்கிரஸ் கவுன்சிலர் மதன்மோகன், சுயேச்சை கவுன்சிலர் டி.கே.வி.உஷா உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் பங்குபெற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed