October 24, 2021

திருவண்ணாமலை காட்டில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மானை நாய்கள் கடித்ததால் மானுக்கு வனத்துறையினர் சிகிச்சை…

1 min read
Spread the love

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவனாக போற்றி வணங்கப்பட்டு வருகிறது, மலையை சுற்றி உள்ள காட்டில் அதிக அளவில் மான், மயில், குரங்குகள் வாழ்ந்து வருகின்றன.
கோடை காலத்தில் வனத்தில் தண்ணீர் இல்லாததால், வன விலங்குகள் தண்ணீர் தேடி நகருக்குள் வரும் போது வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதும், நாய்கள் கடித்து இறப்பதும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை 9வது புதுத்தெருவில், இன்று காலை மான் ஒன்று தண்ணீர் தேடி காட்டிலிருந்து வந்துள்ளது, அந்த மானை நாய்கள் கடித்துள்ளது, அங்கிருந்த பொதுமக்கள் மானை காப்பாற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர் மானை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed