June 21, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ள மருத்துவமனைகளில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு…

1 min read

தூத்துக்குடி கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அனைவரும் ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். அதற்கிணங்க, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர், மேல கூட்டுடன்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஸ்பிக் வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் மையத்தினை ஆய்வு செய்து ஏரல் வட்டம் முக்கானி பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ராஜபதி ஊராட்சியில் தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, காயல்பட்டிணம் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், தூத்துக்குடி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்து தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கொரோனா தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்து எப்போதும் வென்றான் தடுப்புஊசி முகாமை பார்வையிட்டு, ஆய்வு பல மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
செய்தியாளர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்; “தமிழகத்தில் கொரோன தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் ஆணையின் பேரில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஏற்படுத்தபட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும், தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோன தொற்று பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.

தமிழகத்தில் 80லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 46 கோடி ரூபாய் செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தடுப்பூசி 18 முதல் 44 வயதிலானவர்களில் செய்தித்தாள் போடுபவர்கள், காய்கறி விற்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், உள்ளிட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடுவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசிகளை போடாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக மூன்றரை கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அந்த பணி முடிவடைந்தவுடன்

தடுப்பூசிகள் பெறப்பட்டு தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும். அதன் பின்னர் தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாகும். தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தமிழக சுகாதாரத் துறை, தொழில்துறை, மின்சார வாரியத் துறை போன்றவற்றில் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது.

தற்போது ஆக்ஸிஜன்; தட்டுப்பாடு என்பதே இல்லை, என்ற நிலை உருவாகி உள்ளது. மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி வசதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய் நீண்ட நாள் நீரழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சீராய்டு கொடுப்பதனால் ஏற்படுகிறது தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படும் ஆக்சிஜன் கொடுப்பதால் ஏற்படுகிறது. மேலும், சில அசுத்தமான தண்ணீரால் தான் ஏற்படுகிறது. இது குறித்து சிறந்த மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து ஆராய்ச்சி செய்து அதன் பின்னர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ஆராய்வதற்காக மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு இரண்டு நாட்களில் இந்த குழு கூட்டம் நடைபெறும், கொரோன தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை எந்தவித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருவதாக கூறினார்.

ஆய்வின் போது, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், எம்.எல்.ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், மார்க்கண்டேயன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர துணைசெயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வட்டச் செயலாளர் சண்முகராஜ், மற்றும் அல்பர்ட், செந்தில்குமார், ஜீவன், காங்கிரஸ் எடிசன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed