October 24, 2021

கும்மிடிப்பூண்டி அருகே, சுண்ணாம்புகுளம் பகுதியில், தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த போது, நாய்களிடம் சிக்கிய புள்ளி மானை, கிராம மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் வெட்டுகாடு கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமான் ஒன்றை, நாய்கள் சுற்றி வளைத்து கடித்தன.

அப்போது பயத்தில் பாதிக்கப்பட்ட புள்ளி மான் அங்கும் இங்கும் ஓடியது. மானின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த கிராம இளைஞர்கள் கற்களை வீசி எறிந்து நாய்களை விரட்டியடித்தனர். பின்னர், காலில் காயமடைந்த மானை மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்து அதனுடைய பதட்டத்தை தணித்தனர்.

இது குறித்து, சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த மாதர்பாக்கம் வனச்சரக அலுவலர்கள் புள்ளிமானை மீட்டு , காயங்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் புள்ளிமான் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்து, மானை வனத்துறை வாகனத்தில் ஏற்றி காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed