June 21, 2021

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் பகுதியில், சாக்கடை கழிவுகளை அப்புறபடுத்த வேண்டி, பொதுமக்கள் கோரிக்கை…

1 min read

சென்னை மாநகராட்சி மண்டலம் -7க்கு உட்பட்ட அம்பத்தூர் 88 வது வார்ட், பாடி, தேவர்நகர், காந்தி தெருவில் கால்வாய்கள் அனைத்தும் பல நாட்களுக்கு முன் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அந்த கால்வாய்களில் இருந்த மண், மற்றும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து எடுத்து வெளியே போட்டனர்.

ஆனால், வெளியே போட்ட அந்த மண்ணை இன்னும் அந்த பகுதிகளில் இருந்து எடுக்கவில்லை, இந்த கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் இப்படி வீட்டு வாசலில் சாக்கடை கழிவுகள் பல நாட்களாக அப்புறபடுத்தாமல் அப்படியே போட்டு வைத்து உள்ளதால், பல நோய் தொற்றுகள் பரவும் அவலநிலையில் உள்ளது. ஆகவே, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மண், மற்றும் குப்பைகளை அகற்றி நோய் தொற்றில் இருந்து அந்த பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அப்புறபடுத்தாதது வேதனை அளிக்கிறது.

செய்திகள் – கார்த்திக்
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed