June 17, 2021

பத்திரிகையாளர்களுக்கு பேரிடர்கால உதவி புரியும், தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் நன்றி தெரிவித்துள்ளார்…

1 min read

தொடர்ந்து பத்திரிகையாளர் மீது கருணை உள்ளத்துடன் பல நலதிட்டங்களையும், உதவிகளையும் அறிவித்து பத்திரிகையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ)
மாநில தலைவர், டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள், நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், பேரிடர் காலமான இக்காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவதுடன், இக்காலத்தில் முன்களப் பணியாளர்களாக செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி மகிழ்கிறது.

அதே நேரத்தில், பத்திரிகைகளை மட்டுமே நம்பி தமிழ்நாடு முழுவதும் தாலுகா அளவில் பணியாற்றும் ஆயிரகணக்கான செய்தியாளர்கள் உள்ளனர் என்பதை, மூத்த பத்திரிகையாளரான கலைஞர் அவர்களின் வாரிசான தங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இது, பேரிடர் காலமாகும், இக்காலத்தில் பத்திரிகைகளை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும், ஆர்.என்.ஐ அலுவலகத்தில் பதிவு பெற்று வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தின, வார, மாதமிருமுறை, மாத இதழ்களுடைய பணியாளர்களின் நிலையும் மிகச்சங்கடத்தில் இருப்பதை தாங்கள் அறிவீர்கள் அரசு வழங்கும் அடையாள அட்டை பலருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இன்று வரை உள்ளது

இந்த நிலையில், ஆர்.என்.ஐ.யால் அனுமதிக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தின, வார, மாதமிருமுறை, மாத இதழ்களின் வெளியீட்டாளர்கள் பணியாளர்களுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டைதாரர்களுக்கும், தற்பொழுது தங்களால் வழங்கப்படும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும், இக்காலத்தில் நீங்கள் செய்யும் இக்கருணையினால் அனைத்து பத்திரிகையாளர்களும் உங்களுக்கு விசுவாசமாக செயல்படும் நிலையுண்டாகும் என்பதை தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறோம் என, கூறியுள்ளார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *