October 27, 2021

ராஜபாளையம் செட்டியார்பட்டி பேரூராட்சியில் காய்கறி விற்பனை செய்யும் வாகனத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் தமிழகத்தில் அதிகம் இருப்பதால், தளர்வுகள் அற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்போது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டி, வீடு வீடாகச் காய்கறிகளை வாகனத்தில் சென்று விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாகனம் மூலம் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், விற்பனையாளர் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் செயல் அலுவலர் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், செல்வக்கனி, கலைவானர், சாமுவேல், சகாயம் மற்றும் திமுக நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed