June 19, 2021

திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில், முதியோர்களின் பாதுகாப்பிற்காக, “முதுமக்கள் பாதுகாப்பு” திட்டம் அறிமுகம் செய்யபட்டது…

1 min read

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர்
பிரவீன்குமார் அபிநபு அவர்களின் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் முதியோர்களின் பாதுகாப்பிற்காக “முதுமக்கள் பாதுகாப்பு” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத் திட்டத்தின் மூலம் முதியோர்கள் தனியாக வசிக்கும் வீடுகளில் பட்டா புக் வைக்கப்பட்டு காவல் துறையினரால் அடிக்கடி ரோந்து செய்து கண்காணிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொரானா காலகட்டத்தில் முதியோர்களுக்கு அதிகமாக பாதிப்புகள் ஏற்படுவதால் அவர்களின் நலன் கருதி “முதுமக்கள் பாதுகாப்பு சிறப்பு ரோந்து வாகனங்கள்” தொடங்கப்பட்டு அதன் மூலம் முதியோர்களின் வீடுகளுக்குச் சென்று கொரானா பாதுகாப்பிற்காக 1.மாஸ்க்,2.N – 95 மாஸ்க், 3. சானிடைஸர், 4. சோப், 5. கபசுர குடிநீர், 6. பிரட், 7. பிஸ்கட், 8. ஜூஸ், மற்றும் விழிப்புணர்வு பிரசுரம் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்ளின் தேவைகளை முதியோர்களிடம் கேட்டறிந்து அவைகளை வாங்கி கொடுக்க “முதுமக்கள் பாதுகாப்பு” சிறப்பு ரோந்து வாகனங்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. முதியோர்கள் 24 மணிநேரமும் தங்களுக்கு உதவிகள் தேவைப்படும் போது, திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை (தொலைபேசி எண்கள். 0462 252651,9498181200 தொடர்புகொள்ளலாம். எனவும் அறிவிக்கபட்டு உள்ளது.

முதுமக்கள் பாதுகாப்பு சிறப்பு ரோந்து வாகனங்களின், சேவையை சேவையின் பயணத்தை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபிநபு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது, உதவி ஆணையர் சீனிவாசன், துணை ஆணையர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் – இன் – 893947677

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed