June 17, 2021

மீஞ்சூரில், திமுக வர்த்தக அணி சார்பில், தூய்மை காவலர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கபட்டது…

1 min read

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில், ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மீஞ்சூர் பகுதியில் திமுக வர்த்தக அணி சார்பில், தூய்மை காவலர்கள் மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர்.

இந் நிகழ்ச்சியில், திமுக மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், மற்றும் கவுண்டபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மீஞ்சூர் பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் மணிமாறன், ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியை வர்த்தக அணி நிர்வாகி ரஜினிமுருகன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியின் போது, தேவகுமார், பாஸ்கி, ஹரிபிரசாத், கெளரி, புவனா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

திமுக வர்த்தக அணியின் சார்பில், சென்ற ஆண்டும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து இருந்த போது தொடர்ந்து பல கட்டங்களாக உணவு தயார் செய்து வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *