June 17, 2021

கரோனா தொற்று பரவலை தடுக்க அதிகாரிகள் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும்- தமிழக அமைச்சர் சா.மு.நாசர் அறிவுரை…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாகவும், கரோனா தொற்று பாதிப்பை குறைத்திட அனைத்து துறை அதிகாரிகள் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் கரோனா தொற்றை குறைக்க, இரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கும்மிடிப்பூண்டி பேரூர், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரூர், பூண்டி ஒன்றியம், பொன்னேரி பேரூர், மீஞ்சூர் ஒன்றியம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி.உமாமகேஷ்வரி, திட்ட இயக்குனர் லோகநாயகி, சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், முன்னிலை ஆகியோர் வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஒவ்வொரு ஒன்றியம், பேரூர் வாரியாக சுண்ணாம்பு , லைசால், ஹைட்ரஜன் பெர்ரோ குளோரைடு இருப்பு குறித்தும், 18-45 வரை போடப்பட்டுள்ள தடுப்பூசி விபரம், 45ற்கும் மேற்பட்டோருக்கு போடப்பட்டுள்ள தடுப்பூசி விபரம், கடந்த வாரம் மற்றும் இந்த வாரம் ஏற்பட்ட கரோனா பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பேசிய தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கரோனா தொற்று முழுவதும் ஒழிய அதிகாரிகள் முழு மூச்சோடு உழைக்க வேண்டும் என்றதோடு, அடுத்த 7 நாட்களில் 18-45 வயதிற்கு உட்பட்ட 12ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்.

மேலும் தொற்று காணப்படும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்றார். பின்னர் கரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு பெட்டகத்தினை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வட்டார மருத்துவ அலுவலர்களிடம் வழங்கினார்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கான நுரையீரல் பரிசோதனை மையத்தினையும், ஈகுவார்பாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான 30படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தினையும் தமிழக அமைச்சர் சா.மு.நாசர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், வட்டாட்சியர் ந.மகேஷ், டி.எஸ்.பி ரமேஷ், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா, கும்மிடிபூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், நடராஜன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *