October 24, 2021

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்…

1 min read
Spread the love

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோலில் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்.

கடந்த 1991-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைதாகி புழல் சிறையில் உள்ளனர். வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க உச்சநீதி மன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அது நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பேரறிவாளனுக்கு உடல் நலம் கருதியும், கொரோனா 2-வது அலை காரணமாக தமது மகனுக்கு பரோல் வழங்க பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறையில் இருந்து விடுப்பு வழங்க உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்று புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் அழைத்து செல்லப்பட்டார்.

பேரறிவாளன் பரோலில் செல்வது இது 3-வது முறையாகும். பரோலில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லும் பேரறிவாளன் திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed