October 27, 2021

முழு ஊரடங்கு நடைமுறை உள்ளதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு எளிய முறையில் நடந்த திருமணம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அடுத்த புத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் பாபு மணமகள் கோடீஸ்வரி ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அதே கிராமத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந் நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு நடைமுறைப்படுதப்பட்டது அதே கிராமத்தைச் மணமகன், மணமகள் திருமணம் செய்ய அதே கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடத்த முடிவு செய்தனர்.

ஆனால், தமிழக அரசு முழு ஊரடங்கு நடைமுறை உள்ளதால் சமுதாயக் கூடத்தில் திருமணம் நடத்த அனுமதி தரப்படவில்லை
இதனால், மணமகள் வீட்டார் திருமணம் எங்கே நடத்துவது என்று தெரியாமல் தவித்து வந்தனர். மேலும், மே 28ந் தேதி திருமணம் நடைபெறுகிறது என மணமகள், மணமகன் மற்றும் உறவினரிடம் நண்பர்களிடம் தெரிவித்து வந்தனர்.

ஆனால் சமுதாய கூடத்தில் திருமணம் நடத்த அனுமதி இல்லை என்பதால்
மணமக்கள் வீட்டார் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு திருமணம் நடத்திக் கொள்ளலாம் என முடிவு செய்தனர். பின்னர் புத்தியந்தல் கிராமத்தில் மணமகன் மணமகள் ஆகிய இரு குடும்பத்தாரும் திருவண்ணாமலைக்கு வந்தனர். மேலும் முழுஊரடங்கு நடைபெற உள்ளதால் கோவில் மூடப்பட்டு இருந்தது.

இந் நிலையில் அண்ணாமலையார் கோயில் முன்பு மணமகன் மற்றும் மணமகள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனார். தொடர்ந்து அய்யர் தாலி எடுத்து கொடுக்க மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். அப்போது அருகில் இருந்த உறவினர்கள் வாழ்த்தினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed