June 19, 2021

திருவண்ணாமலையில், தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மானை, நாய்கள் கடித்ததால் உயிரிழந்தது…

1 min read

திருவண்ணாமலை காப்புக்காடு பகுதியில் புள்ளி மான் முயல் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பெரும்பாலும் வசித்து வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி பல்வேறு விதமான வனவிலங்குகள் காட்டு பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் சுற்றி வருகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள வள்ளலார் ஆசிரமம் பின்புறத்தில் உள்ள காட்டுப் பகுதியில், இன்று புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. அப்போது அங்கு இருந்த நாய்கள் அந்த புள்ளிமானை கண்டவுடன் குரைக்க ஆரம்பித்தது.

இதனை கண்ட இரண்டு வயது கொண்ட புள்ளிமான் அதிவேகமாக ஓட்டம் பிடித்தது. ஆனால், அந்த நாய்கள் புள்ளிமானை விடாமல் விரட்டி, விரட்டி சென்று கடித்ததில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து, அங்கிருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த புள்ளிமானை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும், இந்த வாரத்தில் மட்டும் நாய் கடித்ததில் இதே போல் மூன்று புள்ளிமான்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால்,
“காட்டுப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.” என அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed