June 19, 2021

உடன்குடி பகுதியில், இரண்டு லட்சத்திற்கும் மேலான புகையிலை பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது…

1 min read

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹார்ஸ் சிங் அவர்கள் உத்தரவின்படி குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர் ஹரிதாஸ், காவலர் ஆனந்த், காவலர் சுந்தர், தனிப்படை அமைத்து உடன்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை ரகசியமாக கண்காணித்தனர்

.

அப்போது, உடன்குடி பகுதியில் சுமார் 263 கிலோ அளவுள்ள புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு 2, 30,000 என மதிப்பிடபட்டு உள்ளது. சிவல்விலை புதூர் சேர்ந்த பெரியசாமி மகன் அழகுவேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed