June 19, 2021

கடையநல்லூரில், வீட்டில் குக்கரை வைத்து, சாராயம் காய்ச்சியவர் கைது…

1 min read

தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த கடையநல்லூர் காவல் துறையினர் தனது உறவினர் வீட்டில் வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சிய மேலக்கடைய நல்லூர் வேத கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரன் (36) என்பவரை கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கடையநல்லூரை சேர்ந்த கனி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed