June 21, 2021

வந்தவாசி பகுதியில், பல உயிர்களை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கொரோனா தோற்று பாதிப்பால் இறந்ததால், பொதுமக்கள் கவலை…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தேசூர் சிங்கார தெருவை சேர்ந்த பழனி என்பவரது மகன் செல்வம், இவர் சில ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த கொரோனா கொன்று காலத்தின் போது இவர் அயராது, தொற்றால் பாதிக்கப்பட்ட பலரை அருகில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனால், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வம் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அதனால் அவருடைய குடும்பத்தார் மட்டுமில்லாமல், சுற்றத்தாரும், அவரால் காப்பாற்றப்பட்ட பலரும் அதிர்ச்சி அடைந்து கவலையில் உள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed