June 21, 2021

இராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சி நெல் கொள்முதல் நிலையத்திலும் மற்றும் தேவதானம் களத்திலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதை Sதங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ இன்று,தொடங்கி வைத்தார்.

1 min read

இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏஅவர்கள், இக்கொரோனா காலத்திலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் என கூறினார். மேலும் சேத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி (JV நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சேத்தூர் கொள்முதல் நிலையத்தில் புதியதாக நெல்கெள்முதல் நிலையம், புதியதாக களம் மற்றும் உயர்கோபுர மின்விளக்கு, அமைக்கப்படும் என தெரிவித்தார்.

அதே போல், தேவதானம் கோவிலூர் பகுதியில் புதியதாக நெற்களம் அமைக்கப்படும் எனக்கூறினார். இந்நிகழ்வில் மண்டல மேலாளர் திருவாசகம் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் சங்கர் எஸ்.நாராயணன், சேத்தூர் பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட், அவைத்தலைவர் மிசா நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் — ஜெகதீஸ்வரி
நிழல் . இன் -8939476778

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed