June 19, 2021

மறைந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு பத்து லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்…

1 min read

மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு பத்து லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்‌ மற்றும் மாநில நிர்வாகிகள் “கழுகு” கே.ராஜேந்திரன், A.லட்சுமணன், “போரூர்” ஜனா மற்றும் எம்.டி.இராமலிங்கம் ஆகியோர் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு (கடந்த ஆட்சியில்) மறைந்த பத்திரிகையாளர் குடும்ப நல நிதி நிலுவையில் உள்ளது என்பதை ஆவணங்களுடன் தந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைத்து தாலுகா அளவில் பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed