June 21, 2021

நெல்லையில் அஜித் ரசிகர்கள் சார்பில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் உணவு வழங்கினார்…

1 min read

கரொனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகளில் சுற்றி திரிந்த மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் , ஆதரவற்றவர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் மீட்கப்பட்டு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு நெல்லை மாவட்ட அஜித்குமார் நற்பணி இயக்கத்தினர்
சார்பில் ஆதரவற்றவர்கள் 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவினை பாளையங்கோட்டை வடக்கு பகுதி இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

காவல் உதவி ஆணையர் சதீஷ் குமார் கலந்து கொண்டு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கி. சமுக நற்பணிகளில் ஈடுபடும் அஜித் ரசிகர்களை பாராட்டினார் இந்நிகழ்ச்சியில்
அஜித் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்
G.கண்ணன் சமூக ஆர்வலர் புல்லட் ராஜா,
நிர்வாகிகள் ஈஸ்வர கண்ணன் ராம்கி, வெங்கட், நாகராஜ், குமார், ஸ்ரீகாந்த் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed