June 19, 2021

கும்மிடிபூண்டியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில், நலதிட்ட உதவி…

1 min read

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளை ஒட்டி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில், கும்மிடிப்பூண்டியில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி கும்மிடிப்பூண்டி எம்ஏல்ஏவும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் பல்வேறு நலதிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி மின்வாரிய சங்கத்தின் சார்பிலும், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் அண்ணா சிலை முன்னும் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில், நகர செயலாளர் அறிவழகன், திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், திருமலை, ரமேஷ், தமிழ்சாதிக், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தேர்வழியில் ஊராட்சி தலைவர் கிரிஜா குமார், ஒன்றிய கவுன்சிலர் அமலா சரவணன் முன்னிலையில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழா கரோனா தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

பின்னர், பாத்தபாளையத்தில் ஊராட்சி தலைவர் சாந்தி சந்திரன், துணை தலைவர் கே.எம்.சுரேஷ், திமுக நிர்வாகிகள் ராஜா, முரளி வார்டு உறுப்பினர்கள் ஏற்பாட்டில் 350 குடும்பத்தினருக்கு தலா 10கிலோ அரிசியை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். நிகழ்வில் ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர்.

இதன்பின் ராமசந்திராபுரத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற 1000மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளின் நினைவாக மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர்கள் கும்மிடிப்பூண்டி ந.மகேஷ், ஊத்துக்கோட்டை ஏ.என்.குமார், டிஎஸ்பி ரமேஷ் முன்னிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்திருந்த 20 நபர்களுக்கு முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகைகளை வழங்கினார்.

நிகழ்வில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி, தேர்வாய் ஊராட்சி தலைவர் முனிவேல் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed