June 21, 2021

காவல் துறையினருக்கு, மருந்து பொருட்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய சித்தமருத்துவ கல்லூரி மருத்துவைரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்…

1 min read

கொரானா தொற்று காலங்களில் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரின் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தியும், காவலர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும், திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவ பேராசிரியர் மானக்சா அவர்கள், முன் வந்து செயல்பட்டார். அதன்படி, கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராடு காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள், முகக் கவசங்கள் மற்றும் முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி உதவி புரிந்து வந்தார்.

அதற்காக, சித்த மருத்துவ பேராசிரியர் மானக்சா அவர்களின் சேவையை பாராட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், அவர்கள் மருத்துவரை நேரில் அழைத்து சேவையை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed