June 21, 2021

பொன்னேரியில் நடந்த “உங்கள் தொகுதியில் முதல்வர்” நிகழ்ச்சி 386 மனுக்களுக்கு தீர்வு, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா…

1 min read

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நானே நேரடியாக களத்தில் நின்று மக்களுடைய குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்யும் விதமாக, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி, அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள் பயனாளிகளுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

அதேபோல், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் “உங்கள் தொகுதியில் முதலவர்” நலத்திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், 386 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ, டி.ஜெ.கோவிந்தராசன், மாதவரம் எம்.எல்.ஏ.சுதர்சனம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் மீஞ்சூர் ரவி, சோழவரம் செல்வசேகரன், சோழவரம் ஒன்றிய துணைத்தலைவர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் உதயசூரியன், தேசராணி தேசப்பன், தாசில்தார்கள் மணிகண்டன், கார்த்திகேயன் வட்ட வழங்கல் அலுவலர் உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன்

மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் தமிழன் இளங்கோவன், மீஞ்சூர் நகரச் செயலாளர் மோகன்ராஜ், கோளூர் கதிரவன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி பேரூராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் ரவிக்குமார், அன்புவாணன், பழவை முகம்மது அலவி, தீபன், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கே. தமின்சா, ஜமுனா ரஜினி, கொண்டகரை ரமேஷ், நந்தியம் கதிரவன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டி. எஸ்.சிவலிங்கம், கோவர்தனன் கார்த்திகேயன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அமரகவி, அபூபக்கர் மற்றும் தன்னார்வலர் குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed