June 21, 2021

விருதுநகர் மேற்கு மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பாக, நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டு வருகிறது…

1 min read

தமிழகத்திலுள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களுடைய அன்பைப் பெற்று திரை உலகில் வளர்ந்து உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொது செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ புஸ்ஸி ஆனந்த் அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இந்த கொரோனா காலத்தில் பல உதவிகளை அவருடைய, மக்கள் இயக்கத்தின் சார்பாக ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் அவருடைய மக்கள் இயக்க சார்பாக, பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக, ஜூன் 1- முதல் ஜூன் 22-ம் தேதி வரை தினந்தோறும், கொரோனா
காலகட்டத்தில் உணவின்றி தவிர்க்கும் ஏழைகளுக்கு தினமும் 100 நபருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 4-வது நாளாக இன்றும் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, விருதுநகர் மாவட்ட மகளிரணி தலைவி ஜெகாவிஜய் , மற்றும் மகளிரணி மாவட்ட செயலாளர் பாண்டீஸ்வரி, சிவா விஜய் விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர்,
பூமாலை விஜய் விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர்,
ராமராஜ் இராஜபாளையம் நகர துணைத்தலைவர், முத்துக்கண்ணன் விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி துணை செயலாளர், நாராயணன், ஆகியோர் மக்களுக்கு உணவுகளை வழங்கினார்கள்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed