June 21, 2021

வைத்தீஸ்வரன் கோயில், ஹோட்டல் அக்ஷர்தம் சார்பில், கலைஞர் பிறந்தநாள் விழா…

1 min read

வைத்தீஸ்வரன்கோயில் படுதியில் இயங்கி வரும் ஹோட்டல் அக்ஷர்தம் சார்பில், கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது.
500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள். எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார்.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பிறந்தநாள் விழாவையொட்டி , மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைகினங்க ஹோட்டர் அக்ஷ்ர்தம் சார்பில் நாகை வடக்கு மாவட்ட திமுகவுடன் இணைந்து 500 குடும்பங்களுக்கு அரிசி , காய்கனி , மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகளை எம்எல்ஏ எம்.பன்னீர்செல்வம் நேற்று வழங்கினார்.

இந் நிகழ்ச்சிக்கு, அதன் நிர்வாகி ஜெயக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன், திமுக பேரூர் கழக செயலாளர் அன்புசெழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர், மாவட்ட பிரதிநிதிகள் சாமிநாதன், கமலநாதன், அவைதலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று 500 பயனாளிகளுக்கு சமூக இடைவெளியுடன் வரவழைத்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் மாரியம்மாள் ஜெயக்குமார்,மேலாளர் ஐயப்பன், பாபு, தைலாஆனந்த், ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் – முத்து
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed