June 17, 2021

கும்மிடிப்பூண்டி அருகே, மதுபான கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு, மது பாட்டில்கள் மற்றும் பணம் கொள்ளை…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு் பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடைகளில் எற்கனவே மூன்று முறை துளையிட்டும், ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் பணம் உள்ளிட்டவை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக கொரொனா வைரஸ் தொற்று தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கு விதித்துள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.

இதனால் கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு், செங்குன்றம், ஊத்துக்கோட்டை, புதுவாயில், பஞ்செட்டி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் தமிழகம் அடுத்து ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மது பாட்டில்களை வாங்கி குடித்து வருகின்றனர்.

தமிழக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும், கண்காணிப்பு கேமிராக்கள் முறையாக இல்லாத சூழலில், கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு் பகுதியிலுள்ள அரசு மதுபானக்கடையை நேற்று இரவு பின்புறமாக ஆள் நுழையும் அளவு துளையிட்டு உள்ளே இருந்த உயர் ரக 100 மதுபாட்டில்களையும், கல்லாவில் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனை அறிந்த கும்மிடிபூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் உடன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *