June 17, 2021

பொன்னேரி அரசு மருத்துவமனையில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பொன்னேரி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் தீவிரமடைந்தது. இதனையடுத்து அந்த கட்டிடத்தில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2ஆம் அலை கொரோனா பரவலில் பெரும்பாலானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் வரவழைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தலைமை மருத்துவர் அனுரத்னா அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் விளைவாக தனியார் நிறுவனமான
எல் அண்ட் டி நிறுவனம் சார்பில், 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நன்கொடையாக அளிக்கப்பட்டது.

நிமிடத்திற்கு 500லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இயந்திரம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நிறுவப்பட்டு கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந் நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

.

இந்த நிகழ்சியில்,
பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி இயந்திரத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். மேலும் 12 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவையும் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் 50 படுக்கையை கொண்ட கொரோனா வார்டு மற்றும் ஆக்சிஜன் எந்திரத்தின் இயக்கம், 12 ஆக்சிஜன் படுக்கைகளுடைய பயன்பாடுகள் குறித்து தலைமை மருத்துவரான அனுரத்னா அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அவைகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் பொன்னையா . திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி, மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர் மருத்துர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது 50படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவில் 25பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தடையின்றி ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மாவட்ட விவசாய அணி செயலாளர் தமிழன் இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோளூர் கதிரவன், டாக்டர் பரிமளம், பொன்னேரி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ரவிக்குமார், மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், பொன்னேரி பேரூர் செயலாளர் விஸ்வநாதன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் டி.எல்.சாதாசிவலிங்கம், கோவர்தனன், கார்த்திக் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *