June 21, 2021

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், 222 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை 2000 ரூபாயும், நலதிட்ட உதவிகளையும்பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது… இந் நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டு 222 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகையாக 2 ஆயிரம் வழங்கபட்டது.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் 5 ஏழை, எளிய பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 11, நபர்களுக்கு தங்கம் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சா.மு.நாசர், மூன்றாம் பாலினதவர்களுக்கான பெயரை மாற்றி அதனை அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அதனையும் மிஞ்சும் வகையில் தற்போதுள்ள முதல்வர் அவர்களுக்கான நிதி உதவியினை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருவதாக தெரிவித்தார். இனி வரும் காலங்களில் தற்போதுள்ள அரசு மூன்றாம் பாலினதவர்களின் நலனை உயர்த்தும் வகையில் செயல்படும் என உறுதியளித்தார்.

முன்னதாக, திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞரின் 98 -வது பிறந்த நாளை முன்னிட்டு ஏ.ஜி. மருத்துவமனை நிர்வாகி ராஜசுந்தரேஸ்வரி, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி நிர்வாகி எம்.கிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் ரூ 6, லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் செரிவூட்டிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் மருந்துகள் உள்ளிட்டவற்றை ஆவடி தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துமனைகளுக்கு வழங்க பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம் வழங்கப்பட்டது.

பின்னர், ஆவடி மாநகராட்சி பகுதி உள்ள பருத்துபட்டு ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய்கள் அமைந்துள்ள வசந்தம் நகர் விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழைக்காலங்களில் நீர்த் தேங்காமல் இருக்க, அந்த இடத்தில் தேங்கி உள்ள குப்பைகள் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அறிவுறுத்தினர். அப்போது அவருடன், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா, ஆவடி மாநகராட்சி ஆணையர், பா.நாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, திமுக நிர்வாகிகள் ஆவடி.ஜி.ராஜேந்திரன், நாராயண பிரசாத், தி.வை.ரவி, சி.ஜெரால்டு, ஜெ.ரமேஷ், மா.ராஜி, வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி, புரட்சிதாசன், ரவிக்குமார், சிங்காரம், மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed