August 3, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில், வனத்துறை சார்பில், கலைஞர் 92வது பிறந்த நாளை முன்னிட்டு, மரம் நடும் விழாவினை மாநில பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்…

1 min read

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 92 பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில், மரம் நடும் விழா திருவண்ணாமலை , புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர், ஆரணி, ஆகிய வனச்சரகத்தில் பல்வேறு இடங்களில் மரம் நடும் விழா நேற்று மாலை நடைபெற்றது.இதில், திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடி அண்ணாமலை வனப்பகுதியில் நடைபெற்ற மரம்நடும் விழாவில், மாநில பொதுப்பணித்துறை மற்றும்நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரம் நடும் விழாவினை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், புங்கன், வேம்பு,ஆலன்,அரசன்,நெல்லி,தான்றிமலர் ஆகிய வகைகளை சேர்ந்த 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரம் நடும் விழாவில், சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி, மாவட்ட வன அலுவலர் அருண் லால், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed