July 28, 2021

ராஜபாளையம் நகராட்சி மன்ற அலுவலகத்தில், கூட்டுக்குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் குறித்து தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை…

1 min read

இராஜபாளையம்
நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் அவர்கள் முன்னிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் வார்டு வாரியாகவும், தெரு வாரியாவும் பணிகள் முடிக்கப்பட்டு நகராட்சி சார்பாக ரோடு அமைக்க விரைவில் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், ரோடு அமைக்க தேவையான நிதியை மதிப்பீடு தயாரித்து அதற்கான நிதியை
உடனடியாக பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ரோடு அமைக்கும் போது பழைய ரோடுகளை அப்புறப்படுத்தி புதியதாக ரோடுகள் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தபட்டது.

அதனை தொடர்ந்து நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. அதனை 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தபட்டது. அவ்வாறு குடிநீர் வழங்கப்படுகையில் பழுது ஏற்ப்பட்டால் அதனை உடனுக்குடன் சீர் செய்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும், மேலும் அனைத்து வால்வு ஆப்ரேட்டர்களும் மாற்றப்பட வேண்டுமெனவும் நகராட்சி பகுதிகளில் தண்ணீர் திறந்து விடுவதற்கு பொதுமக்களிடம் பணம் பெறுவது தெரிந்தால் அப்பணியாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி நகராட்சி நிர்வாகம் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டுமெனவும்,

நகராட்சியில் பொதுமக்களின் குறைகளை சரிசெய்ய தனியாக துறை மற்றும் அலுவலகத்தில் அறை ஒதுக்கி தனியாக பணியாளர் நியமனம் செய்து பொதுமக்களின் கோரிக்கை மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகள் சரி செய்யப்படும் எனவும், தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் நகராட்சி நிர்வாக பொறியாளார்கள் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொது குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *