August 3, 2021

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருமலை நகர், செம்பாசிப் பள்ளிகுப்பம், பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு மலேசியா வாழ் தமிழர்கள் சார்பில் புதுவாழ்வு சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் திருமலை நகர் மற்றும் செம்பாசிபள்ளி குப்பம், பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி நிவாரணப் பொருளாக புது வாழ்வு சமூக நல அறக்கட்டளை தலைவர் வெற்றி குமார் வழங்கினார். இந்த அறக்கட்டளையின் செயலாளர் கோவர்தனன் மற்றும் நிர்வாகிகள் செந்தில், தூயவன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed