August 6, 2021

கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் மருத்துவ உபகரணங்கள் வழங்களை டி.ஜே.கோ விந்தராஜன் வழங்கினார்…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் செயல்பட்டு வரும் எம்.டி.சி நிறுவனம் சார்பில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் எம்டிசி நிறுவனம் சார்பில் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு ரூபாய் 1,17,040 மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 51ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூபாய் 6,12,000 வழங்குதல், 2,30,212 ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் போன்றவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்கு, எம்.டி.சி நிறுவன தலைமை செயல் அதிகாரி மோதிலால் வியாஸ் தலைமை தாங்கினார், நிர்வாக உதவி பொது மேலாளர் பூபதி முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சுத்திகரிப்பு குடிநீர் வசதியை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்வில் பங்கேற்ற சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் டி.ராணியிடம் மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு வருட சம்பளம், மற்றும் மருத்துவ உதவி உபரணங்களை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கி எம்டிசி தொழிற்சாலை நிர்வாகத்தினரை பாராட்டினார்.

நிகழ்வில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அனிதா சுந்தரி, க பெரியஓபுளாபுரம் ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், திமுக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், திமுக நிர்வாகிகள் திருமலை, அறிவழகன், ராஜா,தயாளன், திருநாவுக்கரசு, கீழ் முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், நகர மகளிர் அணி அமைப்பாளர் காமாட்சி, நகர மகளிரணி துணை அமைப்பாளர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed